HomeSri Lankaசுற்றுலாவாசிகளை ஈர்க்க இலவச விசா திட்டம் அறிமுகம்

சுற்றுலாவாசிகளை ஈர்க்க இலவச விசா திட்டம் அறிமுகம்

இலங்கையில் 67 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா வழங்குவதற்கான திட்டம் பற்றிய அறிக்கையை அடுத்த 2 வாரங்களில் அமைச்சரவையில் முன்மொழிய உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ கூறியுள்ளார்.

இலங்கையில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது என்பது நாட்டின் லட்சிய இலக்காக உள்ளது, மேலும் இதனை அடைய பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், சுற்றுலாத்துறையை வளர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் 33% பேர் மீண்டும் மீண்டும் வருவதால், “Sri Lanka – You Come Back for More” என்ற பிரச்சார கோஷத்தை அரசு உபயோகிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து அதிகமான பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை தெரிவித்துள்ளது.

VIDEO

Related News