சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா மற்றும் பொதுச்செயலாளராக துமிந்த திசாநாயக்க தெரிவு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக துறைமுகங்கள் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற கட்சியின் ஒரு பிரிவினரின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தின்போது இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற கட்சியின் அரசியல்பீடக் கூட்டத்தில் நிமால் சிறிபால டி சில்வா பதில் தலைவராகவும் துமிந்த திசாநாயக்க பதில் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.