ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற மூவர், ராமேஸ்வரம் தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த நிலையில், கைது செய்யப்பட்டனர்.
இலங்கையைச் சேர்ந்த அந்தோணி பிரவீன் (35) என்பவர், பெங்களூர் மற்றும் வேளாங்கண்ணி பகுதிகளுக்கு சென்று கஞ்சா கொள்முதல் செய்வதற்காக விசாரித்துள்ளார். பின்னர், ராமேஸ்வரத்தில் உமா செல்வம் (45) மற்றும் கஞ்சா வியாபாரி தியாகராஜன் (57) ஆகியோரின் உதவியுடன், கஞ்சா கடத்த முயன்றுள்ளார்.
இதற்காக, அந்தோணி பிரவீன் ரூ.35,000க்கு 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை வாங்கியுள்ளார். அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் இலங்கை ரூபாய் 50,000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தியாகராஜன் மற்றும் உமா செல்வம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு, மூவருக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தனிப்பிரிவு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.