HomeNewsமுட்டை விலை மீண்டும் உயர்வு!

முட்டை விலை மீண்டும் உயர்வு!

இலங்கையில் சமீபத்தில் முட்டை விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு முட்டை விலை ரூ. 30 வரை குறைந்திருந்த நிலையில், தற்போது ரூ. 40-ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், மார்க்கெட்டில் உள்ள மொத்த முட்டைகள் விற்பனை செய்யப்பட்டு, தற்போது தினசரி உற்பத்தியில் கிடைக்கும் முட்டைகள் மட்டுமே சந்தைக்கு வருவது தான் .

மேலும், முட்டை உற்பத்தி தொடர்பான சிக்கல்களும் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக உள்ளது. உணவுக்கொள்கலன் விலையேற்றம் மற்றும் மழை காலத்தின் எதிரொலியாக முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது .

சர்வதேச சந்தையிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான திட்டமும் இருக்கின்றது, இதன் மூலம் விலை கட்டுப்பாட்டை எட்ட முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது .

VIDEO

Related News