11 மாவட்ட விவசாயிகளுக்கு 15,000 ரூபா உர மானியம் வைப்பில்”

16

விவசாய அமைச்சு தெரிவித்ததன்படி, நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உர மானியத்திற்கான 15,000 ரூபா பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம். விக்ரமசிங்க, இதுவரை 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கணக்கில் 60 மில்லியன் ரூபா பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உர மானியத்தை அதிகரித்துதருவது தொடர்பான நடவடிக்கைகள் கடந்த 14.10.2024 முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி, முதற்கட்டமாக 15,000 ரூபாவும், இரண்டாம் கட்டமாக 10,000 ரூபாவும் வழங்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்திருந்தார்.

இதனால், தற்போதைய நிலவரப்படி, 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 15,000 ரூபா மானியத்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி
Next articleஇலங்கையில் தொடரும் தேங்காய் விலை உயர்வு