கொழும்பு நகரின் முக்கிய வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த நெரிசல், கடுமையான மழை காரணமாக உருவாகியுள்ளது. குறிப்பாக, பொரளை, நகர மண்டபம், ஹோர்டன் பிளேஸ், தும்முல்ல பகுதிகளில் வாகனங்கள் மிகவும் நெருக்கடியில் செல்லுகின்றன.
மேலும், ஜா-எல தொடருந்து நிலையத்தின் அருகே உள்ள சமிக்ஞையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, புத்தளம் மார்க்கத்தில் தொடருந்து சேவைகள் தாமதமாகியுள்ளன என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல்: