விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்கின் தகவலின்படி, அடுத்த ஆண்டில் சோள இறக்குமதியை 150,000 மெற்றிக் டன்னாக குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது வருடாந்தம் சுமார் 300,000 மெற்றிக் டன் சோளத்தை இறக்குமதி செய்கிறது.
சோள இறக்குமதி செலவுக்காக ஒதுக்கப்படும் அந்நிய செலாவணியை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சோள உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், வெளிநாடுகளிலிருந்து விதைகளை இறக்குமதி செய்யாமல் உள்நாட்டிலேயே தேவையான விதைகளை உற்பத்தி செய்யும் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.