Homeheadlineஅனுராதபுரம் மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனுராதபுரம் மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனுராதபுரம் மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அஜித் கரவிட்ட தெரிவித்தார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலக்கட்டத்தில், அனுராதபுரம் மாவட்டத்தில் 17 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

அதோடு, தாயின் மூலம் நோய் பரவியதாக கூறப்படும் 5 குழந்தைகளும் இப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பெரும்பாலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் 25 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களே எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

VIDEO

Related News