இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம் அமுலில்

3

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் இராணுவ நிலைமைகளை கருத்தில் கொண்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் இலங்கை காவல்துறை ஊடகப் பிரிவு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா தலங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி செல்லும் நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெலிகம, பண்டாரவளை மற்றும் எல்ல ஆகிய நகரங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கையில் உள்ள வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்.

Previous articleபுதிய உலக சாதனை: அதிக சர்வதேச டி20 ஓட்டங்கள்!
Next articleஉகாண்டாவில் எரிபொருள் லாரி விபத்தில் 11 பேர் உயிரிழப்பு