HomeNewsவளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

இன்று நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை காணப்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மழை எதிர்ப்பார்க்கப்படும் பகுதிகள்
– மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யலாம்.
– மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIDEO

Related News