தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் பொய்யான செய்திகளை பரப்ப முயற்சிக்கின்றனர் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்திடி பிரதேசத்தில் நேற்று நடந்தnதேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், மக்கள் மத்தியில் பரப்பப்படும் தவறான தகவல்களை அம்பலப்படுத்தினார்.
பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில்நடைபெற்றது.