கொட்டாவை பிரதேசத்தில், மஹரகம வீதியில் ஒரு வேன் திடீரென தீயால் எரிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை (26) நடைபெற்றது.வேனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இந்த விபத்தின்போது, வேனில் மூன்று பேர் பயணித்தனர், அவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
கொட்டாவை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீயின் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரியதாகவும், இந்த சம்பவத்திற்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.