குவைத், வரலாற்றில் முதன்முறையாக, அதிக வெப்பநிலையால் மின்வெட்டை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது. நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வைத்தியசாலைகள் மற்றும் இரத்த வங்கிகள் உள்ளிட்ட அவசரச் சேவைகளுக்கு இந்த மின்வெட்டு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், மின்சார விநியோகத்தை திறம்பட நிர்வகிப்பதற்காக, வெப்பமான நாளின் போது இந்த தற்காலிக மின்வெட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
குவைத்தில் சில பகுதிகளில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸ் அளவில் பதிவாகி, இதனால் மக்கள் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துவதால் மின் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு மின்வெட்டு ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்காலிக மின்வெட்டு மூலம் மின்சாரக் கோரிக்கையை சமநிலைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.