HomePoliticsபிரான்ஸ் உள்நாட்டு யுத்த அபாயம்: ஜனாதிபதி மக்ரோனின் எச்சரிக்கை

பிரான்ஸ் உள்நாட்டு யுத்த அபாயம்: ஜனாதிபதி மக்ரோனின் எச்சரிக்கை

பிரான்சில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.

பிரான்சில் எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான நேஷனல் ரேலி கட்சியும், இடதுசாரி நியூ பாப்புலர் முன்னணி கூட்டணியும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மக்ரோன் உரையாற்றினார். அவர், “இந்த இரு கட்சிகளுக்கு இடையே உள்ள தேர்தல் போட்டி உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்” என்று எச்சரித்தார்.

மேலும், வலதுசாரிகள் பெரும்பான்மை பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்புகள் கூறினாலும், வலதுசாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VIDEO

Related News