கனடா, ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவான “ஈரானிய புரட்சி இராணுவத்தை” பயங்கரவாத குழுவாக அறிவிக்கும் முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை எடுக்க கானேடிய எதிர்க்கட்சி மற்றும் ஈரானிய புலம்பெயர்ந்தோர் குழுக்களின் அழுத்தம் முக்கிய காரணமாக இருந்தது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனேடிய பிரஜைகள் மற்றும் இராஜதந்திரிகளை ஈரானில் இருந்து விலக்கிக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஈரானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஈரானிய புரட்சிப் படையின் உயர்மட்ட அதிகாரிகள் கனடாவுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஈரானிய புரட்சிகர இராணுவம், ஈரானின் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பெரிதும் தலையிடுவதால், இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.