கனடாவில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் புதிய நடைமுறைகளை அமுல்படுத்த பிரமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அதற்கமைய, விரைவாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகளை அறிவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அகதி அந்தஸ்து கோரிக்கையை பரிசீலனை செய்ய 18 மாத காலங்கள் எடுக்கப்பட்ட நிலையில், அதை 9 மாதங்களாக குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை முதற்கட்டமாக தலைநகர் ஒட்டாவாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, விரைவில் நாடு முழுவதும் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் Quebec மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட்டினுக்கும் இடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
புதிய நடைமுறைகள் மூலம் புகலிடம் கோருவோர் விரைவில் தங்கள் நிலைமையை உறுதிசெய்யும் சந்தர்ப்பம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.