HomeWorldCanadaபணவீக்கம் சீராகி வருகிறது என கனடா மத்திய வங்கி ஆணையாளர்

பணவீக்கம் சீராகி வருகிறது என கனடா மத்திய வங்கி ஆணையாளர்

கனடா மத்திய வங்கியின் ஆணையாளர் ரிப் மெக்கலம், கனடாவின் பணவீக்க நிலைகள் சாதகமாக நகர்வதாக அறிவித்துள்ளார். மத்திய வங்கி, நாட்டின் பணவீக்க வீதத்தை இரண்டு சதவீதத்திற்கும் குறைவாக பேணும் நோக்கில் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இப்போது தமது இலக்கை எட்டக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக மெக்கலம் கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக கனடாவில் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது கனடிய நிதிக் கொள்கையில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

ஆனால், வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு சதவீத புள்ளி உயர்ந்து, மே மாதத்தில் 6.2 சதவீதத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIDEO

Related News