மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமானது.
நாடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற்ற இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா, எதிர்கட்சிகள் சார்பில் எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.
ஓம் பிர்லாவை மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யும் தீர்மானத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார். அதை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆதரித்தார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாரலன் சிங் மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்தார், அதை ராஜ்குமார் சங்வான் ஆதரித்தார்.
மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி மூன்றாவது தீர்மானத்தை முன்மொழிந்தார், அதை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆதரித்தார். ஷிண்டே சிவசேனா கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் பிரதாப் ராஜ் ஜாதவ் இன்னொரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மோகன் நாயுடு ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் பிரதமர் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தனர்.
இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷை சபாநாயகராக தேர்வு செய்யும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. சுப்ரியாவின் தீர்மானத்தை திமுக எம்.பி. கனிமொழி ஆதரித்தார். இந்திய கூட்டணியின் வேட்பாளர் சுரேஷை ஆதரித்து மொத்தம் 3 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.
ஆளும் கட்சியின் வேட்பாளர் ஓம் பிர்லாவை ஆதரித்து மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் ஒரு தீர்மானம் முன்மொழிந்தார்.
இதையடுத்து, மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.