Homeheadlineபில் கேட்ஸ் கமலா ஹாரிஸுக்கு மில்லியன் கணக்கிலான டொலர் நன்கொடை: ட்ரம்ப் கருத்துக் கணிப்பில் முன்னிலை

பில் கேட்ஸ் கமலா ஹாரிஸுக்கு மில்லியன் கணக்கிலான டொலர் நன்கொடை: ட்ரம்ப் கருத்துக் கணிப்பில் முன்னிலை

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலகின் முக்கிய பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக இருப்பவரான கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக மில்லியன் கணக்கிலான டொலர்கள் நன்கொடை வழங்கியுள்ளார்.

கேட்ஸ் கூறியது, “சுகாதார மேம்பாடு, வறுமை ஒழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஜனாதிபதி வேட்பாளரை நான் ஆதரிக்கிறேன்” என்றார்.

இதேவேளை, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், அமெரிக்க தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டொலர் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், டிரம்பின் பிரச்சாரத்துக்கு 75 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கி, அவரது பிரச்சாரத்திலும் பங்கேற்று வருகிறார்.

தற்போது, ட்ரம்பிற்கு ஆதரவு அதிகரித்து, அவர் முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. “டெசிஷன் டெஸ்க் ஹெச்குயூ-தி ஹில்” என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின் படி, குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 52% வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். மிச்சிகன், விஸ்கான்சின், அரிசோனா, ஜோர்ஜியா மற்றும் வட கரோலினா மாநிலங்களில் ட்ரம்பிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

இதே சமயம், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு 42% வாக்குகள் கிடைத்துள்ளன.

VIDEO

Related News